புதன், 12 ஜூலை, 2017

தமிழர்களுக்கென்று மீண்டும் ஓர் படை கட்டப்பட வேண்டும்.

எத்துனைப் பெரிய வெகுசனமக்களின் போராட்டமானாலும், அஃது ஒரு சிறிய ஆயுதக்குழுவின் போராட்டத்தை ஒருபோதும் மேவி சமப்படுத்திவிட கூடாது. சமன்படுத்திவிட முடியாது என்பதே உண்மையும் கூட. இஃது வல்லாதிக்கவாதிகளால் கடைபிடிக்கப்படும், அல்லது நிர்மாணிக்கப்பட்ட ஒரு விதி. பண்பட்ட நிலையில் உரிமைக்காகப் போராடும் ஓர் மக்கள் கூட்டம் தன்னிச்சையாக உருக்கொள்ளும்  போராட்டங்களில் ஓர் வடிவமது.
ஒவ்வொரு அரசியல் வழி உரிமைப் போராட்டங்களும், ஆயுத வழி சுதந்திரப்போராட்டமாக பரிணமிப்பதற்கு இவ்விதியே காரணம். இந்த இயற்க்கைவிதியை போராடும் எந்தவொரு இனமும் அசட்டை செய்து விட முடியாது.
ஊருக்கு மத்தியில் குந்தியிருக்கும் காளியோ, அல்லது எல்லையில் நிற்கும் ஐயனாரோ, கையில் ஆயுதமில்லாமல் நமக்கு காட்சி தருவதில்லை. இவர்கள் அக்காட்சியுனூடாக நமக்கு உணர்த்துவதும் மேற்க்குறிப்பிட்டதைத்தான்.
" இன்றைய உலக ஒழுங்கை பலமே தீர்மானிக்கின்றது" என மேதகு அவர்களும் அதையேத்தான் சுட்டிக்காட்டுகிறார் .
வலியது வாழும், என்ற இயற்க்கை விதி, சின்ன மீனை பெரிய மீன் விழுங்கும் என்ற சாணக்கியனின் சொற்கள் அனைத்தும் மேற்க்குறிப்பிட்டத்தை தான் மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றது.
ஆக, தமிழர்கள் ஓர் இனமாக தங்களை காத்துக்கொள்ளவேண்டுமானால் அவர்கள்  வரலாற்றில் இழந்த சேனையை மீண்டும் கட்டவேண்டும்.

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

ஓர் இனம், இருவேறு இறையாண்மை

     
        தமிழின விடுதலையைப் பற்றி சிந்திக்கவும், பேசவும் ஆரம்பித்த நாட்களில் இருந்து இன்று வரை எனக்கு ஒரு பெரும் கேள்வி இருந்து வந்தது.... இன்று அது மரபுத் தொடர்ச்சியை கை காட்டி விட்டு ஆய்வை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுசென்றுள்ளது. கிட்டத் தட்ட இக்கேள்வி சுமார் மூன்று வருடங்களாக எனக்குள் விடைகாணப்படாமலே இருந்தது.
அது ஈழத் தமிழர்கள் தமிழர்களாக இருக்கின்றப்போதிலும் இன்றுவரை அவர்கள் தங்களுக்கென தனி இறையாண்மையை பேணுவது ஏன்? தமிழினம் ஒற்றை இறையாண்மையை பேணாமல் இருப்பது ஏன்?அல்லது ஒற்றை இறையாண்மையை கொண்டிருக்காமல் ஈழம், மலேசியா, தமிழ் நாடு, என தனித் தனி இறையாண்மையை வகுத்து அல்லது அவ்வற்றுக்குள் ஆட்ப்பட்டு  கிடப்பது ஏன்? இந்த கேள்விக்கு பல்வேறு தளங்களில் இருந்து விடைகளும், காரணிகளும் நம்மை வந்தடையலாம், அங்கெல்லாம் நாம் செல்வதற்கு முன்பாக
மற்றுமொரு கேள்வியை முன் வைக்கின்றேன். சேர, சோழ, பாண்டியர்கள் அனைவரும் தமிழர்களாகவே இருக்கின்ற வேளையில் அவர்களும் தங்களுக்கென்று தனித் தனி இறையாண்மையை கொண்டிருந்தது ஏன்? அதாவது ஒரே மொழி, ஒரே பழக்கவழக்கங்கள், கலாச் சாரங்கள் கூட ஒர்மித்தவையே, அப்படியிருக்கையில் அவர்கள் தனித் தனி இறையாண்மையை கொண்டிருந்தது ஏன்? அவர்களுக்குள்ளாகவே அவர்கள் சண்டையிட்டுக் கொண்ட காரணிகள் என்ன? ஆக இன்று ஈழத் தமிழினம் தனி இறையாண்மையைக் கொண்டிருப்பதை விளங்கிக்கொள்வதற்கு முன்னம் ஒரே இனம் தனித் தனி இறையாண்மையை கடைபிடிக்க, பிடித்திருந்ததற்கான காரணிகள் என்ன? என்று நாம் முதலில் தேட வேண்டும்.

http://tharakai.blogspot.ae/2009/04/blog-post_21.html     ஈழத்தமிழினம் ஒருபோதும் தன் இறையாண்மையை விட்டுக்கொடுத்தது கிடையாது.